நான் புது முகவரிக்குச் சென்றுவிட்டேன்:
http://labtap.blogspot.com/
அங்கே சந்திப்போம்...
Sunday, February 11, 2007
Monday, October 17, 2005
தோழிக்கு சில வரிகள்...
முதுகெலும்பில்லாதவன் ஓடி மறைந்துவிட்டான்
உறவுகள் இறுக்கியதில் உலர்ந்துவிட்டான்
நம்பிய நீ திகைத்தது உண்மைதான்
ஆனால்
புதுக்கவிதை நீ புதைந்தா போனாய்?
புரட்சிக்கவிதையாக அல்லவா மலர்ந்தாய் !
காயம் சுமக்கும் உனக்குச் சொல்ல
வார்த்தைகள் ஏதும் என்னிடம் இல்லை,
இந்த வரிகள் மருந்தாகிடும் என்று
நான் எண்ணவும் இல்லை.
காலம் ஆற்றிய காயங்களில்
ஒன்றாகிப் போகும் இதுவும்.
அதுவரை, எல்லாம் தாங்கி
சுற்றி வளைக்கும் சோகக்கூட்டை உடைத்து,
சிறகுகள் வளர்த்து,
சீக்கிரம் பட்டாம்பூச்சியாகிடு என் தோழி...
உறவுகள் இறுக்கியதில் உலர்ந்துவிட்டான்
நம்பிய நீ திகைத்தது உண்மைதான்
ஆனால்
புதுக்கவிதை நீ புதைந்தா போனாய்?
புரட்சிக்கவிதையாக அல்லவா மலர்ந்தாய் !
காயம் சுமக்கும் உனக்குச் சொல்ல
வார்த்தைகள் ஏதும் என்னிடம் இல்லை,
இந்த வரிகள் மருந்தாகிடும் என்று
நான் எண்ணவும் இல்லை.
காலம் ஆற்றிய காயங்களில்
ஒன்றாகிப் போகும் இதுவும்.
அதுவரை, எல்லாம் தாங்கி
சுற்றி வளைக்கும் சோகக்கூட்டை உடைத்து,
சிறகுகள் வளர்த்து,
சீக்கிரம் பட்டாம்பூச்சியாகிடு என் தோழி...
Thursday, September 01, 2005
New Word - STUFFOCATING
While waiting for bus in a basement which was very stuffy, I came up with this word:
STUFFOCATING = Stuffy + Suffocating
STUFFOCATING = Stuffy + Suffocating
Saturday, August 20, 2005
தேவை
"உலகில் நல்ல வாழ்க்கைக்கு எது தேவை ?"
என்று கேட்டார் ஒருவர்.
"வேலை" என்று வேதனையோடு சொன்னான்
வேலையில்லாப் பட்டதாரி,
"குழந்தை" என்று குரல் கொடுத்தனர்
இருவர் மட்டுமே வாழும் ஒரு வீட்டிலிருந்து,
"காதல்" என்றான் ஒரு பித்தன்,
"ஆரோக்கியம்" என்றான் நெடு நாள் நோயாளி,
"கண்கள்" என்றனர் குருடர்,
"முயற்சி" என்கிறேன் நான்,
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
என்று கேட்டார் ஒருவர்.
"வேலை" என்று வேதனையோடு சொன்னான்
வேலையில்லாப் பட்டதாரி,
"குழந்தை" என்று குரல் கொடுத்தனர்
இருவர் மட்டுமே வாழும் ஒரு வீட்டிலிருந்து,
"காதல்" என்றான் ஒரு பித்தன்,
"ஆரோக்கியம்" என்றான் நெடு நாள் நோயாளி,
"கண்கள்" என்றனர் குருடர்,
"முயற்சி" என்கிறேன் நான்,
நீங்கள் என்ன சொல்வீர்கள்?
Saturday, August 13, 2005
துளிர்க்குமா ?
ஒட்டிக்கொண்ட உதடுகளை திட்டிப் பிரித்து,
சொல்ல நினைப்பதை ஆயிரம் முறை சொல்லிப் பார்த்து,
துடிக்கும் இதயத்தை கையில் பிடித்து
நீ வரும் வழியில் காத்திருக்கிறேன் !
நீ உதிர்க்கும் ஒரு புன்னகையில்
அத்தனையும் மறந்துவிட்டு நானும் புன்னகைக்கிறேன் !
அட, இன்றும் துளிர்க்க மறுத்துவிட்டதே என் முயற்சி விதை
இன்னும் கொஞ்சம் தைரியம் ஊற்றிப் பார்க்கிறேன்,
நாளையாவது துளிர்க்குமா என்று காத்திருக்கிறேன் !
சொல்ல நினைப்பதை ஆயிரம் முறை சொல்லிப் பார்த்து,
துடிக்கும் இதயத்தை கையில் பிடித்து
நீ வரும் வழியில் காத்திருக்கிறேன் !
நீ உதிர்க்கும் ஒரு புன்னகையில்
அத்தனையும் மறந்துவிட்டு நானும் புன்னகைக்கிறேன் !
அட, இன்றும் துளிர்க்க மறுத்துவிட்டதே என் முயற்சி விதை
இன்னும் கொஞ்சம் தைரியம் ஊற்றிப் பார்க்கிறேன்,
நாளையாவது துளிர்க்குமா என்று காத்திருக்கிறேன் !
Saturday, July 23, 2005
Thursday, June 30, 2005
Thursday, June 23, 2005
Sunday, June 19, 2005
அழியாத சுவடுகள்
விருட்சத்தைத் தந்துவிட்டு கரைந்துவிட்ட விதை போல்
காதலை தந்துவிட்டு விலகிவிட்டாய்
உன்னைப் பிரிந்த பின்புதான் இதயம் உண்மையில் துடிக்க ஆரம்பித்தது
ஏக்கத்தில் வெடிக்கும் ரத்த நாளங்களை என்ன சொல்லி அடக்குவது?
கரைந்துவிட்ட கனவுகளையும்
உறைந்துவிட்ட உணர்வுகளையும்
எங்கு சென்று புதைப்பது?
உன்னைப் பற்றி சிந்திக்க மறுக்கிறேன்
உன் நினைவுகளிலிருந்து தப்பிக்க முயல்கிறேன்
இது முடிந்துவிட்ட அத்யாயம் என்று
மனப் பக்கங்களை அழிக்கிறேன்
அழியாத பக்கங்களை கிழிக்கிறேன்
ஆனலும்...
முற்றுபுள்ளி தாண்டி நீளும் வரிகளை எப்படி முடிப்பது?
காற்றில் கலந்துவிட்ட நம் சுவாசக்காற்றை எப்படி பிரிப்பது?
காதலை தந்துவிட்டு விலகிவிட்டாய்
உன்னைப் பிரிந்த பின்புதான் இதயம் உண்மையில் துடிக்க ஆரம்பித்தது
ஏக்கத்தில் வெடிக்கும் ரத்த நாளங்களை என்ன சொல்லி அடக்குவது?
கரைந்துவிட்ட கனவுகளையும்
உறைந்துவிட்ட உணர்வுகளையும்
எங்கு சென்று புதைப்பது?
உன்னைப் பற்றி சிந்திக்க மறுக்கிறேன்
உன் நினைவுகளிலிருந்து தப்பிக்க முயல்கிறேன்
இது முடிந்துவிட்ட அத்யாயம் என்று
மனப் பக்கங்களை அழிக்கிறேன்
அழியாத பக்கங்களை கிழிக்கிறேன்
ஆனலும்...
முற்றுபுள்ளி தாண்டி நீளும் வரிகளை எப்படி முடிப்பது?
காற்றில் கலந்துவிட்ட நம் சுவாசக்காற்றை எப்படி பிரிப்பது?
Tuesday, June 14, 2005
யாதும் ஊரே யாவரும் கேளிர்
(எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல்..)
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
Subscribe to:
Posts (Atom)