Thursday, June 30, 2005

பண்டமாற்று

தமிழ்த் தறியில் வரிகள் நெய்து தருகிறேன்
படித்துவிட்டு புன்னகை தாருங்கள் !

Thursday, June 23, 2005

ஒரே வரி

என் வாழ்க்கை நிகழ்ச்சி நிரலில் ஒரே ஒரு வரி
அது உன் முகவரி !!

Sunday, June 19, 2005

அழியாத சுவடுகள்

விருட்சத்தைத் தந்துவிட்டு கரைந்துவிட்ட விதை போல்
காதலை தந்துவிட்டு விலகிவிட்டாய்
உன்னைப் பிரிந்த பின்புதான் இதயம் உண்மையில் துடிக்க ஆரம்பித்தது
ஏக்கத்தில் வெடிக்கும் ரத்த நாளங்களை என்ன சொல்லி அடக்குவது?

கரைந்துவிட்ட கனவுகளையும்
உறைந்துவிட்ட உணர்வுகளையும்
எங்கு சென்று புதைப்பது?

உன்னைப் பற்றி சிந்திக்க மறுக்கிறேன்
உன் நினைவுகளிலிருந்து தப்பிக்க முயல்கிறேன்
இது முடிந்துவிட்ட அத்யாயம் என்று
மனப் பக்கங்களை அழிக்கிறேன்
அழியாத பக்கங்களை கிழிக்கிறேன்

ஆனலும்...
முற்றுபுள்ளி தாண்டி நீளும் வரிகளை எப்படி முடிப்பது?
காற்றில் கலந்துவிட்ட நம் சுவாசக்காற்றை எப்படி பிரிப்பது?

Tuesday, June 14, 2005

யாதும் ஊரே யாவரும் கேளிர்

(எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல்..)

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.