Monday, October 17, 2005

தோழிக்கு சில வரிகள்...

முதுகெலும்பில்லாதவன் ஓடி மறைந்துவிட்டான்
உறவுகள் இறுக்கியதில் உலர்ந்துவிட்டான்
நம்பிய நீ திகைத்தது உண்மைதான்
ஆனால்
புதுக்கவிதை நீ புதைந்தா போனாய்?
புரட்சிக்கவிதையாக அல்லவா மலர்ந்தாய் !

காயம் சுமக்கும் உனக்குச் சொல்ல
வார்த்தைகள் ஏதும் என்னிடம் இல்லை,
இந்த வரிகள் மருந்தாகிடும் என்று
நான் எண்ணவும் இல்லை.

காலம் ஆற்றிய காயங்களில்
ஒன்றாகிப் போகும் இதுவும்.
அதுவரை, எல்லாம் தாங்கி
சுற்றி வளைக்கும் சோகக்கூட்டை உடைத்து,
சிறகுகள் வளர்த்து,
சீக்கிரம் பட்டாம்பூச்சியாகிடு என் தோழி...

5 comments:

Anonymous said...

நன்றாக உள்ளது உங்கள் கவிதை..!!
"பாராட்டுகிறேன் தொடர்ந்து
எழுதுங்கள்" என்று கூறி
நறுக்கென்று முடிக்க விரும்பவில்லை..!!

எதை எல்லாம் கவிதை என்பார்கள்
என்று எனக்குத் தெரியாது..
அந்த அளவிற்கு தமிழ்த்
திறன் என்னிடம் இல்லை
சகோதரரே..

ஆனால் ஒரு கவிதை
வாசித்து நிறைவு பெற்றதும்
மனசும் நிறைவு பெறும்
அதைத்தான் நான் கவிதை
என்பேன்..!!

எந்த வரிகள் என்றாலும்
ஏதோ ஒரு நினைவுகளை அசை
போட வைக்கும்..
அந்த வரிகளுடன்
அந்த நினைவுகள் ஐக்கியமாகும்
அது கவிதை என்பேன்..!!

கவிதை வரிகள்
எதார்தமாகவும் புரிந்து
கொள்ள எளிதாகவும் இருந்தால்
அதையும் கவிதை என்பேன்..!!

உங்கள் கவிதை.. வாசிப்பதற்கும்
புரிந்து கொள்வதற்கும் எளிதாக உள்ளது..
மனசிற்கு இனிதாகவும் உள்ளது..
கவிதையில் குறிபிட்ட பாத்திரமாகவே
நான் என்னை உணர்ந்தேன்..

இது கவிதை..!!

labdab said...

நன்றி நித்யா,
உங்கள் "Comment"e கவிதையாக உள்ளது

Sridhar said...

ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' படத்தில் அவர் எழுதிய
"சிறு வயதில் செய்த பிழை
சிலுவையென சுமக்கின்றாள் !!
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ
மலர் எனவே துளிர்ப்பாளோ!!"

என்கிற வரி நினைவுக்கு வந்தது...

aparnaa said...

Excellent work!!!
as Nitha said , its a well completed kavithai!
well done!!

labdab said...

வருக அபர்ணா...
மிக்க நன்றி